பிரித்தானிய விஜயம் ரத்து! அரசாங்கத்தையும் புலம்பெயர்ந்தோரையும் சாடும் நாமல்
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் (Cambridge Union) உரை நிகழ்த்தவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கூறப்பட்ட விடயம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் போக்கிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) சித்தாந்தத்திற்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாக பகிரங்கமாக நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாமலுக்கு எழுந்த சந்தேகம்
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் வலையமைப்புகள் இன்றும் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து சித்தாந்த ரீதியாக இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, "தெற்கில் உள்ள பௌத்தர்களால் அநுராதபுரத்தை தாண்டிச் சென்று சில் (Sil) அனுஷ்டிக்க முடியவில்லை" என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய கருத்துக்கள் அரசாங்கத்தின் சித்தாந்த திசை குறித்து கவலையளிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் ஜனாதிபதியே இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது, இலங்கையின் தேசிய சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தாம் பிரித்தானியா செல்லும்போது, அங்குள்ள புலம்பெயர் அமைப்புகள் தம்மை வரக்கூடாது எனத் தடுப்பதில் ஆச்சரியமில்லை என்றும் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
பயணம் ரத்து
இந்நிலையில், பெப்ரவரி இறுதியில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கங்கள், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, கேம்பிரிட்ஜ் யூனியன்நிர்வாகம் அவரது உரை நிகழ்த்தும் நிகழ்வை ரத்து செய்ய தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri