முல்லைத்தீவில் இடம்பெற்ற புதுவை பண்பாட்டு பெரு விழா
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டுப் பெருவிழாவானது மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த விழாவானது இன்றைய தினம் (06.04.2024) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் வவுனியா பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நூல் வெளியீட்டு விழா
தமிழ் பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்று மங்களச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இதன்போது புதுவை 2024 நூல் வெளியீட்டு விழாவும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நா. வினோநோகராதலிங்கம் அவர்களும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு, யாழ்ப்பாண முன்னாள் மாவட்ட செயலாளரும் வடக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு தலைவருமான நா. வேதநாயகம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம் சி.குணபாலன் அவர்களும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் நிகழ்வில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை உறுப்பினர்கள் கலைஞர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் அத்தோடு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சுயதொழில் உற்ப்பத்தியாளர்களது கண்காட்சியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி- சண்முகம் தவசீலன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri