ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த ஆவலாக இருக்கும் ஜனக ரத்நாயக்க
மின்சாரத்துறை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த ஆவலாக இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி தம்மை இன்னும் அழைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அத்தகைய அழைப்புக்காக காத்திருப்பதாகவும், தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
ரணில் முன்வைத்த குற்றச்சாட்டு
தாம் சமூகத்தை வழிதவறச் செய்வதாகக் குற்றம் சுமத்தி தமக்கு எதிராக ரணில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் ரட்நாயக்க கூறியுள்ளார்.
தற்போது அதிக மின்சார அலகுகளை கொள்வனவு செய்யும் டிரில்லியம் உட்பட பல நிறுவனங்களின் தலைவர் ரத்நாயக்க என்பதை விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் போது, அவரின் சொந்தச் செலவுகள் அதிகரிக்கின்றன என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து ரத்நாயக்கவின் தயக்கத்துக்கு இதுவே காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது குறித்து மின்சார சபை இன்னும் அறிவிக்கவில்லை
என்றும், தமது அமைப்பின் அனுமதியின்றி அத்தகைய திருத்தம் செய்ய முடியாது
என்றும் ரட்நாயக்க குறித்த நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
