திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்கள் தொடர்பான விபரம் வெளியீடு
திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பலர் தங்களின் சொத்துகளை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.அவை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து பாதுகாப்புத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி தேவஸ்தானத்துக்கு உள்ள 1,128 சொத்துக்களில் 8 ஆயிரத்து 88 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 141 இடங்களில் உள்ள சொத்துகளில் 335.23 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 61 இடங்களில் உள்ள 293.02 ஏக்கர் விவசாய நிலமும், 80 இடங்களில் விவசாய நிலமல்லாத 42.21 ஏக்கர் நிலங்களும் ரூ.6 கோடியே 13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி 987 இடங்களில் உள்ள 7753.6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 172 இடங்களில் உள்ள நிலம் வேளாண் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது 1792.39 ஏக்கர் விவசாய நிலமும், 5,961 விவசாயமல்லாத நிலமும் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
