இவரை கண்டால் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார்..
கொழும்பு, காலி முகத்திடல் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று கடுமையான பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கண்டறிந்து கைது செய்யப் பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 23ஆம்திகதியன்று கோட்டை (Fort) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு
குறித்த சிறுமி கடத்தப்பட்டமை மற்றும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு கிடைத்ததையடுத்து, கோட்டை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தேடப்படும் சந்தேகநபரின் உருவப்படத்தை (sketch) வெளியிட்டுள்ள பொலிஸார், அவரை அடையாளம் காணவும் கண்டுபிடிக்கவும் உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591560 என்ற எண்ணிலோ அல்லது கோட்டை பொலிஸ் நிலையத்தை 011-2432635 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.