ராஜபக்ச நிழல் அரசுக்கும் உடன் முடிவு கட்ட வேண்டும் : சஜித் வலியுறுத்து (Photos)
ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ஒரு ராஜபக்ச நிழல் அரசு உருவாகியுள்ளது, இதற்கும் மக்கள் உடனடியாக முடிவு கட்ட வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
ஹரிஸ்பத்துவ தொகுதி அக்குரணை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ராஜபக்ச நிழல் அரசு
இந்த நாட்டு மக்களின் மாபெரும் போராட்டத்தாலேயே நாட்டை அழித்த ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட ராஜபக்ச குழுவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்றும் நாட்டில் மாற்றமேதும் ஏற்படாதது ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ஒரு ராஜபக்ச நிழல் அரசு உருவாகியுள்ளதாலேயே. ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வர நாம் ஒருபோதும் செயற்படவில்லை.
இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்த சிலர், அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே எனச் சொல்லி, தாம் நல்ல பிள்ளைகள் போல் காட்டிக்கொள்ள செயற்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
