அரச ஊழியர்கள் தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவர்! - இம்ரான்

Srilanka Trincomale Imran Mahroob
By Independent Writer Oct 13, 2021 08:07 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் வருகின்ற தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroob) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கம் கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைக் கேட்டு இம்மாத சம்பளத்தில் இருந்து அதனை அறவிட ஏற்பாடு செய்துள்ளதாக அரச ஊழியர்கள் மிகவும் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

சகல பொருட்களினதும் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை அரச ஊழியர்களின் சம்பளத்தில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக விடுமுறைக் கொடுப்பனவு, மேலதிக நேரக்கொடுப்பனவு எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெருங்கஸ்டத்துக்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கால கட்டத்தில் அவர்களின் ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதென்பது கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்கின்ற நிலையாகும். குளிருட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு அரச ஊழியர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த பெரும் கஸ்டங்களை அனுபவித்து வரும் உண்மை நிலை தெரியாது.

தெரிந்திருந்தால் இப்படியொரு தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் சம்பளத்தை அறவிடும் தீர்மானம் தொடர்பில் தாம் அடுத்தவருக்கு இனங்காட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் விருப்பமில்லாமலே சம்மதம் தெரிவித்ததாக அரச ஊழியர்கள் பலர் என்னிடம் வேதனையோடு முறையிட்டனர்.

வாழ்க்கை செலவு வானளவு உயர்ந்திருக்கின்ற நிலையில் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது குறைந்த பட்சம் சிலரது ஒரு நாள் உணவை துண்டாடும் செயலாகும். இது மனிதாபிமானமுள்ளவர்களால் அனுமதிக்க முடியாத நிலையாகும்.

இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்ட போதும் அவை எவற்றையும் காதில் கொள்ளாது சம்பளத்தை அறிவிடுவதில் அரசு குறியாக இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இதிலிருந்து அரச ஊழியர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் அரசில் இருக்கும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசுக்கு கூஜா தூக்குவோரும் கூட இந்த நிலையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அரச ஊழியர்களின் நலன்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அப்படி அக்கறை இருந்திருந்தால் அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியிருப்பார்கள்.

நாம் எமது ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கினோம். அவர்களது அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சம் 100 வீதத்தால் அதிகரித்தோம். எதிர் காலத்தில் எமது ஆட்சி வருகின்றபோது அரச ஊழியர்களது நலன் பேணும் பல திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

இதனை நாம் தெளிவுப்படுத்தியுள்ளோம். எனவே, கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வேதனையும், கண்ணீரும் வருகின்ற தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US