முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் வாகன தரிப்பிடம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை(Photos)
முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
இதனால் நீதிமன்ற தேவையின் நிமித்தம் அங்கு வருகைதரும் பொதுமக்கள் வாகனங்களை வீதியின் இரு மருங்குகளிலும் நிறுத்திவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்தில் அசௌகரியம்
இதேவேளை குறித்த பகுதியில் வாகன தரிப்பிடம் இன்மையால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது அண்மித்த பகுதிகளிலோ வாகன தரிப்பிடம் ஒன்றினை அமைத்து தருமாறு கோரியுள்ளனர்.
மேலும் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam