அடக்குமுறை சட்டங்கள் மூலம் பொதுமக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது!அனுரகுமார திஸாநாயக்க
நீதிமன்ற உத்தரவுகள் அல்லது அடக்குமுறை சட்டங்கள் மூலம் அரசாங்கத்தின் அநீதி மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உழைக்கும் மக்களின் நிதியை கொள்ளையடிப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும், அத்தகைய நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி இடமளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகள்
அரசாங்கம் உழைக்கும் மக்களின் EPF மற்றும் ETF நிதியில் முறைகேடு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
“தோட்ட தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களுக்கு அவர்களின் ஓய்வுக்குப் பிறகு EPF மற்றும் ETF மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள். இந்த நிதியில் முறைகேடு செய்வது அநீதி மற்றும் நியாயமற்றது.இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடுவோம். அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தோ, நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றோ பொதுமக்களின் போராட்டங்களை நிறுத்த முடியாது,'' என்றார்.
ஆட்சியாளர்கள் பொது நிதியை கொள்ளையடித்தும், தவறாகப் பயன்படுத்தியும் பயனற்ற திட்டங்களுக்கு வீணடித்து நாட்டை கடன் நிலைக்கு தள்ளியுள்ளனர் என்றும், இந் நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் இன்னும் வெளியில் இருக்கும் போதே அரசாங்கம் உழைக்கும் மக்களின் நிதியை கொள்ளையடிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |