மன்னார் அடம்பன் பிரதான வீதியில் தொடரும் விபத்துக்கள்: போராட்டத்தில் குதித்த மக்கள்
மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருவதால், வீதித் தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம், இன்றைய தினம் (05.03.2024) செவ்வாய்க்கிழமை வீதிகளை மறித்து நடைபெற்றுள்ளது.
அடம்பன் பிரதான வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் பலியாகியுள்ளதோடு தொடர்ச்சியாக இந்த வீதியில் விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.
தொடர்ச்சியான மரணங்கள்
இதனாலேயே, வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு முன்னதாகவே பிரதேச சபைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அது அமைக்கப்படாமையினால்
தொடர்ச்சியாக இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள் ஆதங்கங்களை
வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர், விரைவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - ராஜுகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
