கிண்ணியாவில் மயானப் பிரச்சினையை முன்வைத்து பொதுமக்கள் போராட்டம்!
கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(7.7.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - கிண்ணியா நகர சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சின்னத் தோட்டம் பகுதியில் கழிவு முகாமைத்துவத் தளம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
நிரந்தரத் தீர்வு
இந்தத் தளத்தை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றக் கோரியும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுமே சின்னத் தோட்ட மக்கள், இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு தொடர்ச்சியாகக் கழிவுகள் கொட்டப்படுவதனால், அருகில் உள்ள இந்து மயானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றம் மற்றும் குப்பைகளின் விசிறல் காரணமாகவும், கழிவுகளால் கவரப்பட்டு வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாகவும், இறந்தவர்களின் சடலங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும், நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை தாங்கள் அவதானத்துடன் இருக்கப் போவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam