தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய பொதுமக்கள்
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டமானது தற்போது தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நாளையதினம் பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றும் நாளையும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுமாறு கோரிதொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில் மக்களின் நிலங்களை அக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 11.02.2025 பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மேலும் இப்போராட்டம் நாளை பௌர்ணமி தினமாகிய 12.02.2025 புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
