இனவாதிகளுக்கு அஞ்சவேண்டியவர்கள் நாங்கள் அல்ல பௌத்தர்கள் தான்(Video)
மேர்வின் சில்வாவின் வார்த்தைகளுக்கு அஞ்ச வேண்டியது தமிழர்கள் அல்ல, பௌத்த சிங்களவர்களே என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தமிழர் தொடர்பில் சர்ச்சை கருத்துக்களை கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து லங்காசிறி ஊடகத்தின் 'மக்கள் குரல்' நிகழ்ச்சியில் பொது மக்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது கூறியுள்ளதாவது, மேர்வின் சில்வா என்பவர் பக்குவமடையாத ஆன்மா என்றும் அவர் ஓர் அரசியல் அழுக்கானவர் மற்றும் அவரின் வார்த்தைகளுக்கு அஞ்ச வேண்டியது தமிழர்கள் அல்ல பௌத்த சிங்களவர்களே.
அத்துடன், மேர்வின் சில்வா, முன்னாள் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் அரச ஊடகத்தைத் தாக்கியமை போன்ற சம்பவங்களில் கைதானவராவார்.
ஆகவே இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தூண்டுவதாக அல்லது இன்னும் உக்கிரமடைய செய்வதாகக் காணப்படும் என கூறியுள்ளனர்.
இது குறித்து மேலும் பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கீழ்வரும் காணொளியில் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



