இராணுவத்தினரின் காணி விடுவிப்பு : பலாலி வடக்கு மக்கள் ஏமாற்றம்
யாழ்.பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் (03.02.2023) யாழ்.பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.



ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவிப்பு
சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்து கொண்டு பார்க்க முடிவதாகவும், அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்து வருவதை காண முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri