வெல்கம் விகாரை வனப்பகுதி காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
திருகோணமலை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வெல்கம் விகாரை பகுதியிலுள்ள காணிகளை அபகரித்து அங்குள்ள காட்டு மரங்களை வெட்டி வேலி அமைத்துக் கொண்டிருந்த போது, குறித்த பகுதியை பொதுமக்கள் சுற்றி வளைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்கள் ஆதங்கம்
சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு 65 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி கையகப்படுத்தப்படுவதனை அவதானித்தது வேலி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பல வருட காலங்களாக அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு இன்னமும் காணித் துண்டுகள் அரசினால் வழங்கப்படாத நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற செல்வந்தர்களுக்கு வனப்பகுதிகள், காணிப்பகுதிகள் என்பன தாரைவாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தம்மால் பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதற்கு அரச அதிகாரிகளும் அப்பகுதியில் உள்ள விகாரையின் விகாராதிபதியும் உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டினர்.
பாரிய மரங்களை வெட்டி வேலி
குறித்த வனப்பகுதியில் தமது தேவைக்காக விறகு வெட்டச் சென்ற போது பலதடவைகளில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது பாரிய மரங்களை வெட்டி வேலி அமைப்பதற்கு எவ்வாறு இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குறித்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
