சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை!
நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை நெருக்கடிகளை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63லிருந்து 60 ஆக குறைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு 176 மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
வர்த்தமானி அறிவித்தல்
இந்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக பேணுமாறு உத்தரவிட்டிருந்தது. அமைச்சரவையும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஓய்வு பெற வேண்டியிருப்பதாகவும் இதனால் ஒட்டுமொத்த சுகாதாரத்துறை நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் அபாயம் எழுந்துள்ளது எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan