தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்
இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர், நிர்வாக விதிமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியே அச்சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும்
அதன்படி, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று (20) முதல் நாடு முழுவதும் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் விலகிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள்(PHI) ஒன்றியமும் இப்பிரச்சினை தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளருக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5