கோவிட் தடுப்பு கடமைகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்
மேல் மாகாணத்தில் கோவிட் தடுப்பு கடமைகளில் இருந்து விலக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரம் கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
சுகாதார சேவையின் கீழ் மட்ட ஊழியர்கள் பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மாத்திரம் தடுப்பூசிகளை வழங்குவதை எதிர்ப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.
சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் கோவிட் தடுப்பு கடமைகளில் இருந்து விலகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சுகாதார அமைச்சு, அரச மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு கோவிட் தடுப்பூசியை வழங்க அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.