ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவை மதிக்காத பொது மக்கள்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவையும் மீறி மக்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீண்ட வார இறுதி விடுமுறைகள் வருவதால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டினை கடுமையாக்குமாறு ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்தது. எனினும் அதனை கருத்திற் கொள்ளாத மக்கள் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட விடுமுறை காரணமாக கொழும்பிற்கு வெளியே பிரதான ஹோட்டல்களின் அனைத்து அறைகளும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் அந்த கட்டுப்பாட்டை மீறி பலர் குறித்த பிரதேசங்களை நோக்கி பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளதென சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் விசேட வைத்தியர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று குறையவில்லை என்ற சூழலுக்கு மத்தியில் மக்கள் சுகாதார ஆலோசனையை பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் ஒரு கொவிட் அலை ஏற்படும் அவதானமிக்க நிலைமையை தடுக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
