சடலங்களை எரியூட்டுவதால் ஏற்படும் புகையால் பொதுமக்கள் அசௌகரியம்
வவுனியா - பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்குச் சொந்தமான மயானத்தில் கோவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்ற நிலையில் அதன்மூலம் வெளிச் செல்லும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாவதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த மயானத்தில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆயினும் சடலங்களை எரியூட்டும் போது அதன் புகை வெளியேறுவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கும் கோபுரம் உயரம் குறைவாகக் காணப்படுவதால் அதனூடாக வெளிச்செல்லும் புகை அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்வதுடன், அந்த வீதியினை பயன்படுத்துபவர்களுக்கும் இதனால் அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே குறித்த புகைபோக்கும் கோபுரத்தினை தற்போது இருக்கும் உயரத்தினை விட மேலும் அதிகரிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam