பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள ஷானி அபேசேகர : பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வழங்குவதிலும் சிக்கல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தற்போது ஒரு கடுமையான நெருக்கடிக்கு அல்லது ஒரு பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளார்.
அவருக்கு இரண்டு பிறந்தநாட்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்குக் கிடைக்கவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பதவியும் பறிபோயுள்ளதாகத் தெரியவருகிறது.
ஷானி அபேசேகர என்ற பெயர் நீண்ட காலமாக சமூகத்திலும், அரசியல் அரங்கிலும், நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் கூட பெரும் பேசுபொருளாக மாறிய விடயமாகும்.
பிரகீத் எக்னெலிகொட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்! சந்தியா எக்னெலிகொட வெளியிட்ட தகவல்கள்..
சதித்திட்டம்
இவ்வாறான பின்னணியில்தான் அவருக்கு இந்த இரண்டு பிறந்தநாள் தொடர்பான பிரச்சினை உருவெடுத்துள்ளது. அவர் 40 வருட காலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் அதற்கு வெளியேயும் இலங்கையில் இடம்பெற்ற பல குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, அந்த விசாரணைகளை மிகவும் துல்லியமாக நடத்தி, அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிந்தவர்.
இப்போது இந்த பிறந்தநாள் விவகாரத்தை ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தி, ஷானிக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியை வழங்காமல் இருப்பதற்காக தற்போது சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
நீதிமன்றமும் நிர்வாக மேன்முறையீட்டு ஆணைக்குழுவும் இந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகத் தீர்மானித்திருக்கும் நிலையிலும், அதை வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருக்கும் நிலையில், இவ்வாறானதொரு பிரச்சினையை முன்னிறுத்தி அதனை வழங்காமல் இருப்பது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.
நீதிமன்ற தீர்ப்பு
ஏனெனில், நீதிமன்றமும் நிர்வாக மேன்முறையீட்டு ஆணைக்குழுவும் இது குறித்து உண்மைகளைத் துல்லியமாக விசாரித்தே அந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இரண்டு பிறந்தநாட்கள் என்ற விடயத்தை இலக்கு வைத்து தடைபோடுவதாகவே தெரியவந்துள்ளது.
இவ்விடயம் சானி அபேசேகரவின் பிழையல்ல.இது பொலிஸ் ஆணைக்குழுவின் பிழையாகும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவே இரண்டு பிறந்தாட்களை ஆவணங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சானி அவ்வாறான ஆவணங்களை வழங்கவில்லையாம். கடந்த காலங்களில் தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, சுகீஸ்வர பண்டார போன்றவர்கள் ஷானி அபேசேகரவை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தனர்.
அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்தும், விசாரணைப் பிரிவுகளில் இருந்தும் நீக்குவதற்குப் பல வேலைகளை அவர்கள் செய்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், பொலிஸ் ஆணைக்குழுவும் இந்த முறையில் செயற்படுமானால், அது பெரும் சர்ச்சைகுரிய சூழ்நிலையாகவே கருத வேண்டியுள்ளது.