பளை பொதுச் சந்தைக்கு செல்லும் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிளைப்பள்ளி, பளை பொதுச் சந்தைக்கு செல்லும் நுழைவாயிலில் மண் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுவதால் பிரதேச மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இரு புறமும் மணல் கொட்டப்பட்டு பரவிக் காணப்படுவதால் மக்கள் சந்தைக்கு சென்று மரக்கறிகள் மீன் இறைச்சி என்பவற்றை கொள்வனவு செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பளை பொதுச் சந்தை கட்டிட தொகுதியானது தினம் தினம் மக்கள் வருகை தரும் முக்கிய இடமாக இருப்பதுடன் மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தை என்பன அருகருகே காணப்படுகின்றது.இதனால் மக்கள் தமது அதிகளவான வருகையை மேற்கொண்டு வருகின்றனர்.
கோரிக்கை
இந்த சந்தைக்கு உட்செல்லும் இரு புற பாதைகளிலும் மணல் கொட்டப்பட்டு பரவிக்காணப்படுவதால் தமது அன்றாட செயற்பாடுகளை செய்ய மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் மற்றும் முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் வருபவர்கள் தாம் தமது வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக தினம் வரும் கட்டாயத்தில் இருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வீதியானது இவ்வாறே தொடர்ந்து காணப்படுவதால் தமது வாகனங்கள் இலகுவில் பழுதடைவதாகவும் தமது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சந்தை நுழைவாயிலில் வீதி புனரமைப்பு தொடர்பான சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வீதியினை மிக விரைவில் புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
