குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் பற்றாக்குறை : கவலை வெளியிட்ட மனித உரிமை ஆணைக்குழு
இதுவரை ஏறத்தாழ 11,000 பொது முறைப்பாடுகளை தாம் பெற்றுள்ளதாகவும் இந்த
முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (28.07.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதில் பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதால் எழும் சவால்கள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
ஜனாதிபதி வழங்கிய உறுதி
இந்தநிலையில் பணியாளர் வெற்றிட பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கும் நிலுவையில் உள்ள முறைப்பாடுகளுக்கு துரிதமான தீர்வுகளை காண்பதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க குறித்த அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தநிலையில் அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கான விரிவான வழிகாட்டுதல்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்தகைய வழிகாட்டுதல்கள், ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
,இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி தெஹிதெனிய மற்றும் ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாதிமா பர்ஸானா ஹனீபா, நிமலசேன கார்திய புந்திஹேவா உள்ளிட்டவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
