கிளிநொச்சியில் சைகை மொழி பயிற்சி ஆரம்பம்
கிளிநொச்சியில் (Kilinotchchi) மக்கள் தொடர்பாடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
செவிப்புலனற்றோருக்கு உரிய சேவையை வழங்கும் நோக்குடன் குறித்த பயிற்சியானது இன்று (24.04.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றின் அணுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பயிற்சியானது டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
சைகை மொழி பயிற்சிகள்
அத்துடன் பொதுமக்கள் சேவையை பெற்றுக்கொள்ள வருகை தரும்போது, செவிப்புலனற்றோருக்கு உரிய சேவையை வழங்கும் நோக்குடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் நான்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்களுடன் நேரடியாக சேவை வழங்கும் உத்தியோகத்தர்களை அடையாளம் கண்டு குறித்த பயிற்சியானது வழங்கப்படுகின்றது.
இதன் மூலம், எதிர்காலத்தில் செவிப்புலனற்றோரும் இலகுவாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுவதுடன் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.