பொது வேட்பாளர் போட்டியால் 'மொட்டு'க்குள் பூகம்பம்!
அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு 2024 ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலையில் இப்போதே இறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கான ஏற்பாட்டையும் அந்த தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்ற அரசின் உணர்வையும் தற்போதைய பொருளாதார நகர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் பொது வேட்பாளராக களமிறங்கி வெல்வதற்கான வியூகத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் போட்டி
குறித்த இரு கட்சிகளும் கொள்கையளவில் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.இருந்தும், ரணிலுக்கு தலையிடி கொடுக்கும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் வேட்பாளர் போட்டி எழத் தொடங்கியுள்ளது.
பொது வேட்பாளராக ரணிலை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இப்போது
வரை இணங்கியுள்ள போதிலும், அக்கட்சிக்குள் இருக்கின்ற பசில் ராஜபக்சவுக்கு
ஆதரவான தரப்பு பசிலையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற ஒரு கோஷத்தை
முன்வைக்க தொடங்கியுள்ளது.
பசிலுக்கு அழுத்தம் கொடுக்கும் தகவல்
அவரது அமெரிக்கா பிரஜாவுரிமையை இப்போதே இரத்து செய்து அதற்காக தயாராகுமாறு அந்த தரப்பு பசிலுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இந்த பிரச்சினையானது எதிர்வரும் நாட்களில் மெல்ல மெல்ல வளர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவுக்குள் பெரும் பூதாகாரத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




