லசந்த விவகாரத்தில் பொலிஸாருடன் சந்தேகநபர்கள் மோதல்: அவசர உதவிகோரும் பொலிஸார்

CID - Sri Lanka Police Matara Shooting Sri Lanka Police Investigation
By Dhayani Oct 26, 2025 09:54 AM GMT
Report

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல பொலிஸ் குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

அதன்படி,  அநுராதபுரம் - கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது

லசந்த விவகாரத்தில் பொலிஸாருடன் சந்தேகநபர்கள் மோதல்: அவசர உதவிகோரும் பொலிஸார் | Public Assistance Sought To Arrest Suspect

பொலிஸாருடன் முரண்பாடு

இதையடுத்து,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட நிலையில், பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லசந்த விவகாரத்தில் பொலிஸாருடன் சந்தேகநபர்கள் மோதல்: அவசர உதவிகோரும் பொலிஸார் | Public Assistance Sought To Arrest Suspect

சந்தேகநபரின் அடையாளம்

அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.

லசந்த விவகாரத்தில் பொலிஸாருடன் சந்தேகநபர்கள் மோதல்: அவசர உதவிகோரும் பொலிஸார் | Public Assistance Sought To Arrest Suspect

இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதுடன், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) - 071 859 8888, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு - 011 233 7162 / 071 859 2087 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லசந்த விக்ரமசேகரவின் இறுதி சடங்குகள் : அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி

லசந்த விக்ரமசேகரவின் இறுதி சடங்குகள் : அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி

முக்கிய பிரமுகர்கள் உட்பட பலருக்கு பாதாள உலக கும்பலினால் கொலை மிரட்டல்

முக்கிய பிரமுகர்கள் உட்பட பலருக்கு பாதாள உலக கும்பலினால் கொலை மிரட்டல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US