முதியவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி
நுவரெலியா கிரகரி (Gregory Lake) வாவியில் அடையாளம் தெரியாத வயோதிபரின் சடலமொன்று கடந்த 06ஆம் திகதி மிதந்த நிலையில் மீட்கப்பட்டு நுவரெலியா பொலிஸாரினால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த வயோதிபருக்கு 60 தொடக்கம் 75 வயது மதிக்கலாம் எனவும் சடலத்தை அடையாளம் காட்டினாலே உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நுவரெலியா பொலிஸ் கோரியுள்ளது.
நபர் யார் என அடையாளம் காணப்படாததால்
சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நபர் யார் என அடையாளம் காணப்படாததால் இந்த வயதை கிட்டிய நபர்கள் எங்காவது காணாமல் போயிருந்தால் அல்லது இவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொலைபேசி எண்கள்: 052-2222222, 052-2222223, 071-8591097
தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர், நுவரெலியா.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri