ஹட்டன் நகர சபை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு.. சபையில் இருந்து முன்னாள் தலைவர் வெளிநடப்பு

Nuwara Eliya Sri Lankan Peoples Hatton
By Malaivanjan Mar 25, 2026 02:32 PM GMT
Report

ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் நகரசபை நிர்வாகத்தினாலும் தலைவரினாலும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதனை தெரிவித்து இன்று ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போது உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார் இன்று சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

ஹட்டன் நகர சபையின் மாதந்த கூட்டம் நேற்று 24ஆம் திகதி நகரசபையின் தலைவர் அசோக சேனாரத்ன தலைமையில் நடைபெற்றது.  

இந்த வெளிநடப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"ஹட்டன் நகரசபையின் தற்போது பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்போம் என கூறி வந்து இப்போது செயலிழந்து கிடக்கின்றது.

யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்

யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்

தீர்க்கப்படாத பிரச்சினைகள்.. 

அதற்கு சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. ஆனால் அதில் முக்கியமானவற்றை மாத்திரம் நான் இங்கு தெரிவிக்கின்றேன். ஹட்டன் டிக்கோயா நகர பிரதேசத்தில் இன்று என்றுமில்லாதவாறு குடிநீர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

ஹட்டன் நகர சபை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு.. சபையில் இருந்து முன்னாள் தலைவர் வெளிநடப்பு | Public Allegations Against Hatton City Council

நீர் வழங்கல் வடிகால் சபையினால் ஆறு நாட்களுக்கு ஒரு முறை தான் நீர் பெற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் மூன்று நாட்டுகளுக்கு ஒரு தடைவை குறுந் தகவல்கள் பெற்றுக்கொடுத்த போதிலும் 06 நாட்களுக்கு ஒரு முறை தான் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். என்றுமில்லாத அளவுக்கு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

நீருக்கான கட்டணத்தனை மாத்திரம் வட்டியுடன் சேர்த்து அறிவிடுகின்றார்கள். ஆனால் மக்களுக்கு குடிநீரினை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளனர். இது குறித்த நான் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே இந்த பிரச்சினைக்கு தீர் காணுமாறும் இதற்கு வடிகால் அமைப்பு சபையுடன் பேசி நிரந்தர நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும் தெரிவித்திருந்தேன்.

அது மாத்திரமன்றி அப்போதைய ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் அபுசாலி 22 குழாய் கிணறுகளை அமைத்திருந்தார். அவை இன்று செயலற்று போய் உள்ளன அதனையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதனால் பல குடும்பங்களின் நீர் பிரச்சினை தீரும் என்பதை சுட்டிக்காட்டினேன் ஆனால் அதுவும் செய்யப்படவில்லை.

இன்று இந்த நகரசபையினை பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் குப்பை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறியே ஆட்சி அமைத்தது ஆனால் 9 மாதங்கள் கடந்து விட்டன. இன்று பார்த்தால் சென்ற இடமெல்லால் குப்பைகளால் நிறைந்து வழிகின்றன.

இதற்கு எந்த வித தீர்வும் கிடையாது போதாது என்று மிகவும் பெறுமதி வாய்ந்த முன்னாள் வாடி வீடு இருந்து பகுதியில் குப்பை கொட்டுவது மட்டு மல்லாமல் அதனை தீ வைத்து மாதக்கணக்கில் எரிகின்றன ஆனால் காற்று மாதக்கணக்கில் மாசுகிறது இது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். 

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகன்: பிரதேச சபை உறுப்பினர் கைது

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகன்: பிரதேச சபை உறுப்பினர் கைது

ஆளுநரின் அனுமதி 

இதனால் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். உண்மையிலேயே இந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு கெசட் செய்து ஆளுநரின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இவை எதுவும் செய்யப்படவில்லை இது குறித்து அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் உள்ளனர்.

ஹட்டன் நகர சபை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு.. சபையில் இருந்து முன்னாள் தலைவர் வெளிநடப்பு | Public Allegations Against Hatton City Council

குறிப்பாக வீடுகளில் ஈ தொல்லை,அசுத்தமான காற்றினை சுவாசிப்பதனால் சுவாச நோய் பிரச்சினை உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. கிளின் சிறிலங்க என்று சொல்லிக்கொண்டு மக்கனை அசுத்த காற்றினை சுவாசிக்க செய்வது கிளின் ஸ்ரீ லங்காவா என கேட்கத்தோன்றுகிறது.

அது மாத்திரமன்றி கட்டகாளி நாய்களின் தொல்லை, அத்தோடு ஏழை வர்த்தகர்கள் நடைபாதை வியாபாரம் செய்தால் நகரசபை அதிகாரிகள் எவ்வித தயவுமின்றி அவர்களை விரட்டுகின்றனர். ஆனால் பெரும் வர்த்தகர்கள் பாதையினை மறித்து வியாபாரம் செய்தால் அதனை கண்டு கொள்தில்லை அது மத்திரமன்றி ஹட்டன் நகர சபை எல்லையில் எத்தனையோ சட்டவிரோத அனுமதியற்ற கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இது குறித்து நான் ஆட்சியில் இருக்கும் போது வழக்கு தாக்கல் செய்யுமாறு தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன் இன்றும் பல சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன இவை அனைத்தையும் சுட்டிக்காட்டிய போதிலும் நகர சபை தலைவரா அல்லது அதிகாரினாலோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான எத்தனையோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்த போதிலும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்நிலை எனது காலத்தினையும் நேரத்தினை விணாக்குவதை விட வெளியேறுவது நல்லது என நினைத்தே இன்று வெளிநடப்பு செய்தேன் மக்களுக்காக நான் தொடர்ந்தும் தனிமனிதனாகவேனும் நின்று போராடுவேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US