கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி சில நாட்களாக துண்டிக்கப்பட்டமையால் தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில்,
''கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூநகரி போன்ற கடும் நீர் நெருக்கடியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முற்றுமுழுதாக குழாய் வழி நீரையே அனைத்து தேவைகளுக்கும் நம்பியிருந்த நிலையில் சில நாட்களாக நீர் விநியோகம் மேற்கொள்ப்படவில்லை.
நீர் இன்மை
இதனால் தாம் கடும் நெருக்கடியை சந்தித்தாகவும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உத்தியோகத்தர்கள் பலரும் நீர் இன்மையால் மிக மோசமாக பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.
அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது,
கிளிநொச்சியில் அமைந்துள்ள தங்களது நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் நீர் பாவனை அதிகமாக காணப்படுவதனால் சம நேரத்தில் எல்லா பிரதேசங்களுக்கும் நீரை வழங்க முடியாதுள்ளது.
இதன் காரணமாக மட்டுப்படுத்த அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
