பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைக்கு எதிரான மனு! தொடர் விசாரணைக்கு இலங்கை நீதிமன்றம் அனுமதி!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து, மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், வழக்கு முடியும் வரை விதிமுறைகளை செயல்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
2021 மார்ச் 12ஆம் திகதியன்று சிறப்பு வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்ட வன்முறையான தீவிரவாத மதக் கருத்தியலில் இருந்து தீவிரமயமாக்கல் என்ற விதிமுறைகளுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள், பொது மக்களின், அரசியலமைப்பு ரீதியில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பலவற்றை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.
விசாரணை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri