உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கை சிறுவர்கள்
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக சிறுவர்கள் கடுமையான உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர்கள் எதிர்நோக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாரிய சிரமங்களை எதிர்நோக்கும் சிறுவர்கள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் இது குறித்து கொழும்பு ஊடுகம ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில்,
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்புக்கு மத்தியில் மாணவர்கள் பாடசாலைக்கு சென்று தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மன அழுத்தம் ஏற்படாமல் சிறுவர்களைப் பாதுகாக்க பெற்றோர் உட்பட சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri