பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்ற தீர்மானம் சபாநாயகரிடம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் (PSTA) சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், நாடாளுமன்றச் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்குக் கிடைத்துள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் இன்று (10.11.2026) உறுதிப்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட தொடர் மனுக்கள் மீதான விசாரணை, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அசெல வேகப்பிட்டிய, சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கடந்த நவம்பர் 04ஆம் திகதி ஆரம்பமானது.
தனது இரகசிய தீர்மானத்தை
இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியலமைப்பின் கீழ் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் கூறினர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உட்பட பல்வேறு தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்புக்கு முரணானதாகக் காணப்படுகிறது என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் மீதான இரண்டாம் நாள் விசாரணை நேற்றையதினமும் (09) தொடர்ந்தது.
நேற்றைய விசாரணைகளின் முடிவில், இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த தனது இரகசிய தீர்மானத்தை சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன்னர் மூன்று பேருந்துகள் மோதி கோரவிபத்து! 5 பேர் பலி - பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
வீட்டில் தனியாக இருந்த யுவதி சடலமாக மீட்பு! வங்கிக்கு சென்று திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
YOU MAY LIKE THIS VIDEO