இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு காணியும் வீட்டுத்திட்டமும் வழங்கி வைப்பு
இந்தியாவிலிருந்து நாடு திரும்பி செட்டிகுளம், பெரிய புளியாலங்குளம் கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வந்த காணியற்ற மக்களுக்கு இன்று காணி வழங்கி வைக்கப்பட்டதுடன், வீட்டுத்திட்டமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்று மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய நிலையில், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியபுளியாலங்குளம் கிராமத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வசித்து வந்தோர், நீண்டகாலமாகத் திருமணம் முடிந்தும் காணிகளற்ற நிலையில் வாழ்ந்து வந்தோர் என 16 குடும்பங்களுக்கு இவ்வாறு வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள அரச காணியானது அரை ஏக்கர் வீதம் குடியிருப்பதற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த காணிகளில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், அம்மக்களின் நீர்த்தேவைக்காக பொதுக்கிணறு ஒன்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் வீ.சீ.ஆர்.பபாபயோன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சண்முகநாதன், கிராம அலுவலர் அஸ்லம், ஒப்பர் சிலோன் நிறுவன முகாமையாளர் மற்றும் உத்தியோதகத்தர்கள், வீரபுரம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
