இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு (Video)

Mannar Tamil nadu Sri Lanka Sri Lankan Peoples India
By Ashik May 30, 2022 12:30 PM GMT
Report

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ள நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிவாரணபொதிகள் பிரதேசங்கள் தோறும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கிராமங்களை உள்ளடக்கிய வறிய குடும்பங்களுக்கான உதவி வழங்கம் நிகழ்வு இன்று (30) காலை புதுக்குடியிருப் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம சேவையாளர் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 7ஆயிரத்தி 529 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பொருட்கள் இதன்போது வழங்கப்பட்டன.

“இதனை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் எங்கள் மக்களின் வறுமையினை உணர்ந்து காலத்தின் தேவையறிந்து செய்த இந்த அரிய உதவிக்கு எல்லோருக்கும் நன்றி பாராட்டுகின்றோம்” என்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு  (Video) | Provision Dry Food Families Mannar District

இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு  (Video) | Provision Dry Food Families Mannar District

இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு  (Video) | Provision Dry Food Families Mannar District

https://en.wikipedia.org/wiki/Mullaitivuதமிழ்நாட்டு மக்களின் அன்பளிப்பு

மன்னார் மாவட்டத்தில் 25,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோ அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று (30) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவுப்பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முதற்கட்டமாக 6500 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 65,000 கிலோ உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு  (Video) | Provision Dry Food Families Mannar District 

இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு  (Video) | Provision Dry Food Families Mannar District

உதவி பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 

இந்த நிலையில் குறித்த பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(30) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். 

இந்திய அரசின் நிவாரணபொதிகள்: நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கிவைப்பு  (Video) | Provision Dry Food Families Mannar District

குறித்த நிகழ்வில் இந்திய துணை தூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது முதல் கட்டமாக 60 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகத்திற்கு பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளன. 

மேலும், நாளைய தினம் (31) நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலகங்களுக்கு, உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US