மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் : சிவநேசதுரை சந்திரகாந்தன்
மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடப்பட்டமையானது நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையினை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவினை அவர் எடுத்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு அச்சப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை.
கோவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் மக்களின் நிலையினைக்கொண்டே இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது. இந்த நிலைமை சுமுகமானதும் நிச்சயமாக விரைவில் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறும்.
ஆனால் மாகாண சபை தேர்தல் வருடக்கணக்கில் பிற்போடப்படும் என்று எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. இந்த வருட நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் நடைபெறும் என்று நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri