இவ்வருடம் மாகாண சபை தேர்தல் நடைபெறாது.. டில்வின் செல்வா வெளியிட்ட தகவல்
இவ்வருடம் 2026 மாகாண சபை தேர்தலை நடாத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் செல்வா தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலுக்காக வரவு - செலவு திட்டத்தை ஒதுக்கிய காசு அனர்த்தத்துக்கு செலவு செய்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடாத்தும் எண்ணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,"முதலாவது காரியம், கடந்த வரவு - செலவுத் திட்டங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம்.
நெருக்கடி நிலை
ஆனால், அவ்வாறு திட்டமிட்டிருந்த போது நாட்டில் பாரிய வெள்ளநத்தம் (டித்வா புயல்) அதனோடு இணைந்து பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியான சூழல் உருவானது.

அதனால், வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கும்போதே, இந்த நெருக்கடி நிலைக்காக மாத்திரம் 500 பில்லியன் ரூபாய்களை (50,000 கோடி) ஒதுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்தப் பணம் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணமாகும்.
இதன் காரணமாக, இந்த வருடத்தில் எங்களால் தேர்தலை நடத்த முடியாமல் போனதுதுடன், தற்போது புதிய சில சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக இருந்த சட்டரீதியான வழிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதும் பிரதான காரணம்.
எனவே, தற்போது நாடாளுமன்றத்தில் ஒரு குழுவை நியமித்துள்ளோம். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அக்குழு ஆராய்ந்து வருகிறது.
அந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அது குறித்தும் பரிசீலித்து, அடுத்த வருடமாகும் போது வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் வராவிட்டால், பெரும்பாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நம்புகிறோம். இந்தியத் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவிதமான அழுத்தங்களும் இல்லை.
கொழும்பில் பல பகுதிகளில் பெண்களை அச்சுறுத்தி வந்த நபர் அதிரடியாக கைது - சிக்கிய பெருந்தொகை தங்க நகைகள்
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam