மாகாணசபைத் தேர்தலை நடாத்தக்கூடாது:புத்தசாசன செயலணி
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடாத்தக்கூடாது என புத்தசாசன செயலணி கோரியுள்ளது.
மாகாணசபைகள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போயுள்ள பின்னணியில் தேர்தல் நடாத்துவதில் பயனில்லை எனவும், அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடாத்தும் முனைப்புக்களை மேற்கொள்வது வருத்தமளிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு பொருத்தமான உள்ளுராட்சி மன்ற முறைமையையும், கிராமசபை முறைமையையும் அரசாங்கம் அறிமுகம் செய்ய வேண்டுமென அறிக்கை ஒன்றின் மூலம் புத்தசாசன செயலணி கோரியுள்ளது.
தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு புத்திஜீவிகள் குழுவொன்றை நியமித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும், மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என புத்த சாசன செயலணி குறிப்பிட்டுள்ளது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam