மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான்
மாகாண சபை அதிகாரப்பகிர்வு பிரிவினையை நோக்கி நகராது சிறுபான்மை சமூகத்தவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ற நம்பிக்கையை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமும், மக்கள் மயப்படுத்தப்பட்ட முறையான திட்டங்களை முன்மொழிவதனால் மாத்திரமே மாகாண சபை முறைமை வெற்றியளிக்கும் எனவும், மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசாங்கத்திடம் தொடர்ந்தும் முன்வைத்து வருவதாக அக்கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து அதற்கு முறையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு, காயன்குடா,தளவாய், இலுப்படிச்சேனை, கரடியனாறு, பன்குடாவெளி போன்ற பல கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் நம்மோடு இணைந்து பணியாற்ற வருமாறு “ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறுகோரி வருகின்றோம்.
இப்போதும் நாம் இந்த தேர்தல் நடத்தப்படல் வேண்டும் என அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். அரசாங்கமும் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினாலும் ,கோவிட்- 19 காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருட இறுத்திக்குள் மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்க்கலாம். அதற்கான திட்டமிடலைத் தான் நாங்களும் செய்து கொண்டு வருகின்றோம். கிழக்கில் நானும் முதலமைச்சராக இருந்தவர். இலங்கையைப் பெறுத்தவரையில் மாகாணசபை முறைமை தான் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். இது சட்டமாக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் கொண்டுவரப்பட்டது. அதில் தற்காலிக இணைப்பாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு துரதிஸ்ட வசமாக கால நீடிப்பு இழுபட்டு வர 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையை நான் பொறுப்பேற்றேன்.
கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தனித்துவமாக இயங்கலாம். நான் முதலமைச்சராக வந்த பின்னர் தான் கிராமத்திலிந்து ஒருவர் இவ்வாறு முதலமைச்சராக வரலாம்,அபிவிருத்திகள் செய்யலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வந்தது.
பல விதமான பின்னடைவுகளும், பலவீனங்களும் இருந்தாலும், மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு இயக்கமாக செயற்பட்டால் சிங்கள மக்களுக்கும் இது ஒரு பரிவினையாக நகராது.மாகாண சபைஉறுதியாக வெற்றியளிக்கும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு இணக்கப்பாட்டு அரசியலை விரும்புகின்ற கட்சி. நாம் தொடர்ந்து ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு, செயல் வடிவம் கொடுக்கக்கூடிய ஏற்பாட்டுகளுடன் தொடர்ந்தும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.









தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
