மாகாண சபைத் தேர்தல் நடக்காது! முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெல்லும்போது தேசிய மக்கள் சக்தி வலுவாக இருந்தது.
தற்போதைய அரசாங்கம்
அதனால்தான் உள்ளூராட்சி சபைகளில் வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.
எனினும், இந்த அரசு ஓடாது, நிச்சயம் விழும் என எதிரணி உறுப்பினர்கள் நம்புகின்றனர். ஓராண்டு கடந்தும் உள்ளூராட்சி சபைகள் ஊடாக எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

இதனால் தான் எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கின்றனர். மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் நம்பிக்கை இழந்து வருகின்றது.
எனவே, மாகாண சபைத் தேர்தலை இந்த அரசு நடத்தாது. ஏனெனில் ஒரு சபையைக் கூட வெல்ல முடியாத நிலையே இந்த அரசுக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam