பழைய முறையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்த ஆலோசனை
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது ஏற்கனவே எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தியா உட்பட்ட தரப்புக்களில் இருந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வலியுறுத்தல்
இதன்படி, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்த ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசியலமைப்பை முழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்த, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும் என்று இந்தியா, கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




