மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்:ஆணைக்குழு பகிரங்கம்
மாகாண சபை தேர்தலை ஏன் நடத்தவில்லை என தினமும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்கள் காரணமாகவே மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமல் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று (23.02.2026) ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய இவர்,
சட்டச் சிக்கல்
நீண்ட காலமாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு தேவையான நடவடிக்கையும் எடுத்துள்ளது.

இப்போதும் அது குறித்த அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளோம்.விசேடமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தும் அனைத்து கட்சிகளும் மற்றும் பிரதிநிதிகளும் விரைவில் நாடாளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்திட்டங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறித்த சட்டத்திட்டங்கள் நிறைவடைந்த உடன் நாங்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.