சிம்பாப்வே அணித் தலைவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு
சிம்பாப்வே அணியின் கெப்டன் Sikandar Raza, இலங்கை மற்றும் இந்நாட்டு மக்களைப் பற்றிய மிகவும் உணர்ச்சி மற்றும் நெகழ்ச்சியான ஒரு பதிவை தனது உத்தியோகப்பூர்வ X (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சிம்பாப்வே அணிக்கு கிடைத்த உயர்ந்த வரவேற்பும் ஆதரவும் குறித்து அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சிறப்பு அம்சமாக, அவர் அந்த குறிப்பை சிங்கள வார்த்தைகளை ஆங்கில எழுத்துக்களில் (Singlish) பயன்படுத்தி, “Bohoma sthuthiyi Sri Lanka, man Sri Lankawata godak adarei” என பதிவிட்டுள்ளார்.
பாராட்டுக்கள்
இலங்கை ஒரு அழகான நாடாக மட்டுமல்லாது, இங்கு வாழும் மக்கள் மிகவும் அன்பானவர்களாக உள்ளனர் என்றும், தமக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு அவர் மிகுந்த மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “Ikmaninma hamuwemu” (விரைவில் மீண்டும் சந்திப்போம்) எனக் குறிப்பிட்டு தனது பதிவை நிறைவு செய்துள்ளார். Sikandar Raza உலகம் முழுவதும் கிரிக்கெட் இரசிகர்களின் மரியாதையை பெற்றுள்ள திறமையான வீரர் ஆவார்.
Bhoma isthuthi Srilanka . Mn Srilanka wata godak aderi sundara ratak saha sundara minsun ina ratak .Bhoma isthuthi apita duna support ekata.
— Sikandar Raza (@SRazaB24) February 20, 2026
Ikmanin hamuwemu Srilanka In sha Allah pic.twitter.com/l9WmITxhaY
இலங்கைக்கான அவரது இந்த பாசம், இந்நாட்டு கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெரிதும் ஈர்த்துள்ளது. குழு சுற்றுப் போட்டியின் B குழுவின் இறுதி ஆட்டமாக இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் அண்மையில் மோதிய நிலையில், அந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri