நிச்சயமாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் - கு. திலீபன்
நிச்சயமாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா - கருப்பனிச்சான்குளத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடாகும். அந்த மாகாண சபை தேர்தலிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்தம் பட்சத்தில்தான் வடமாகாணம் வளமான மாகாணமாக வரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
சுதந்திர கட்சியினர் ஏற்கனவே இருந்த மாகாணசபையை கூட்டுமாறு தெரிவிப்பது அது அவர்களுடைய கருத்தே தவிர அது முடிவல்ல. பெரும்பான்மை உள்ள இவ் அரசில் முக்கிய பதவியில் இருக்கும் எமது அமைச்சர் கூட மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டும் என விரும்புகிறார்.
அவருக்கு நல்லதொரு சமிக்ஞை கிடைத்தபடியால்தான் எல்லா கூட்டங்களிலும் மாகாணசபை நடாத்தபடும், நடாத்தப்பட்ட வேண்டும் என கூறிவருகின்றார். ஆகவே நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் என தெரிவித்தார்.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri