மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
எவ்வித தாமதமுமின்றி இந்த ஆண்டுக்குள்ளேயே மாகாணசபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன அறிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றுமுன் தினம் (15.05.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் தாமதப்படுத்தப்படுகின்றது என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த அமைச்சர், அரசு தேர்தலை நடத்துவதில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதில் சிரமம்
இது தொடர்பில் அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தேர்தலை நடத்துவதில் எமக்குச் சில சவால்கள் இருந்தன என்பது உண்மைதான்.

ஆனால், தேர்தல் தாமதமாவதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை. இந்த 2026ஆம் ஆண்டுக்குள்ளேயே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
தேர்தல் நடத்தப்படும் குறிப்பிட்ட மாதத்தையோ அல்லது திகதியையோ தற்போது துல்லியமாகக் கூற முடியாது. காலக்கெடு நிர்ணயிக்கப்படாவிட்டாலும் மிக விரைவில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். எனவே, எவரும் இது குறித்து வீண் கவலையடையத் தேவையில்லை என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam