கிழக்கு மாகாண பௌத்த அறநெறி கல்வி அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்
கிழக்கு மாகாண பௌத்த அறநெறி கல்வி மேம்பாட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஜயந்தலால் ரட்னசேகர தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பௌத்த அறநெறி கல்வி மற்றும் அதன் வாயிலாக கல்வி கற்கும் மாகாண மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்த விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
முக்கிய தீர்மானம்
மேலும், அவற்றைத் தீர்க்க மாகாண கல்வி அமைச்சு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கல்வி அமைச்சின் அறநெறி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி கும்பல்கொட டம்மாலோக தேரர், பணிப்பாளர் (அபிவிருத்தி) கந்தலே விஜிதவங்சதேரர் , கல்வி அமைச்சின் கல்வி துறையுடன் தொடர்புடைய பல முக்கிய பௌத்த பிக்குகள், திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண கலாச்சார துறை அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தில் இயங்கும் பௌத்த அறநெறி கல்வி வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
