எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை
எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோரிக்கை

"நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றார்கள்.
மேலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனை பெறுவதற்காக நோய் நிலைமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக நீண்டநேரம் காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கின்றேன்.
நீராகாரம்
ஆகவே, இயன்றவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு உள்ளூராட்சி சபைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் கொடை வள்ளல்கள் ஆகியோரை கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.

முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam