கம்பஹா மாவட்டம்: நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு
கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று இரவு (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பணிகள்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் குழாய் அமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பகுதிகள்
கம்பஹா நகரம், கம்பஹா மிரிஸ்வத்த வீதி, ஹன்சகிரி வீதி, யக்கல வீதி, ஒருதொட்ட வீதியிலிருந்து கறுப்புப் பாலம் வரையிலான பகுதி, உடுகம்பொல வீதியில் சதொசவுக்கு அருகில் உள்ள பாலம் பகுதி மற்றும் ஜா-எல வீதியில் உள்ள புகை பரிசோதனை நிலையம் வரையான பகுதிகளிலேயெ நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்