முல்லைத்தீவில் 78 குடும்பங்களுக்கு காணி உரித்து ஆவணங்களை வழங்க நடவடிக்கை (Photos)
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பாலிநகர் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் 78 வரையான குடும்பங்களுக்கு காணி உரித்து ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் றஞ்சனா நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
காணி உரித்து ஆவணங்களை வழங்கும் நடமாடும் சேவை
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் கிராமத்தில் அரச காணிகளில் வசித்து வரும் மக்களுக்கான காணி உரித்து ஆவணங்களை வழங்கும் வகையிலான நடமாடும் சேவையொன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் மாகாண காணித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கிராமத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வரும் மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கப்படாத நிலையில், காணிகள் தொடர்பான நடமாடும் சேவைகளை மேற்கொண்டு காணி உரித்து ஆவணங்களை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட விசாரணைகள் மாகாண காணித்திணைக்களத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், அக்கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும்78 குடும்பங்களுக்கு
காணி உரித்து ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் றஞ்சனா நவரட்ணம்
தெரிவித்துள்ளார்.








