யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லையென முடிந்தால் நிரூபியுங்கள்! சபையில் கஜேந்திரன் பகிரங்க சவால்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை பாதுகாப்புப்படையினர் எவ்வித குற்றங்களையும் இழைக்கவில்லை என்பதை, முடிந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதிப்பதோடு, மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் செல்வராசா கஜேந்திரன் தனது உரையில் இலங்கை படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த கருத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
