நாடளாவிய ரீதியில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் (video)
நாடளாவிய ரீதியில் பல துறைகளின் தொழிற்சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நியாயமற்ற வரிச் சட்டத்திற்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் இன்று (08.02.2023) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியர்கள் நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிச்சுமை , வானுயரும் பணவீக்கம், தொழில் வல்லுநர்கள் நடு வீதிக்கு போன்ற வாசகங்கள் உள்ள பதாதைகளை ஏந்திவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 9 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரியானது 6 வீதம் தொடக்கம் 36 வீதமாக உள்ள நிலையில் அதை 6 வீதம் தொடக்கம் 24 வீதமாக குறைக்க கோரியும், வரி அறவிடும் சம்பள எல்லையை ஒரு லட்சம் தொடக்கம் இரண்டு லட்சம் வரை மட்டுப்படுத்தி வரி அறவிடுமாறு கோரியும், வங்கி ஊழியர்கள் போரட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டத்தின் நிறைவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பாதையை நோக்கி வரி சுமைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
செய்தி: ஆஷிக்
மட்டக்களப்பு
அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்குமுறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று (08.02.2023) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் வானுயரும் வரிச்சுமை, நாட்டை விட்டகலும் தொழில் வல்லுனர்கள், நண்பர்களுக்கு வரிச்சலுகை, தொழில் வல்லுனர்களுக்கு வரிச்சுமை, வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: குமார்
யாழ்ப்பாணம்
யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று (08.02.2023) வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வங்கி ஊழியர்களின் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அரை நாள் வேலை நிறுத்தம் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.






உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
